fbpx

இன்றுமுதல் மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!… மத்திய ரயில்வே அறிவிப்பு!

இன்றுமுதல் தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்(01144) வருகிற 9, 16, 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மும்பையில் இருந்து தூத்துக்குடி சிறப்பு ரயில்(01143) இன்றுமுதல் 14, 21, 28 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும். இதே போல தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்(01144) வருகிற 9, 16, 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

இந்நிலையில் மும்பையில் இருந்து மதியம் 1:15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இதேபோல தூத்துக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 3:40 மணிக்கு மும்பையை வந்தடையும். இந்த ரயில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், ரேச்சூர், வாடி, காலபர்கி, சோலாப்பூர், பாண்ட், புனே, லோனவாலா, கல்யாண், தாதர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட்நியூஸ்!... புதிய விதிகளை அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!

Fri Jul 7 , 2023
டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி வங்கிகள் மற்றும் பிற கார்டு வழங்கும் நிறுவனங்கள் தங்களின் டெபிட், கிரெடிட் மற்றும் பிரீபெய்டு கார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு நெட்வொர்க்கில் வழங்க வேண்டும். இது பல அட்டை நெட்வொர்க் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டு […]
மக்களே அடுத்த ஷாக் நியூஸ்..!! மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி அதிரடி..!!

You May Like