மீசையை முறுக்கு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஆத்மிகா. அவர் அதற்கு பின் கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவருக்கு மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது ஆத்மிகா தற்போது பிரபல மொபைல் நிறுவனம் மீது ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார். Autopay ஆப் செய்த பிறகும் தனது கணக்கில் இருந்து 4999 ருபாய்யை எடுத்துவிட்டார்கள் என அவர் புகார் கூறி இருக்கிறார்.அதன் பிறகு இந்த பிரச்சனை பற்றி புகார் தெரிவித்து அந்த பணத்தை திரும்ப பெற வழி கிடைத்து இருப்பதாகவும் அவர் மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.