fbpx

ஆளுநர் மாளிகை வழங்கும் ரூ.5 லட்சம் + விருது…! ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

தமிழ்நாடு கவர்னர் மாளிகை சார்பில், சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில், 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு, 2024 குடியரசு தினத்தன்று, பாராட்டு சான்று மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப, இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஒவ்வொரு பிரிவிலும், ஒரு நிறுவனம் மற்றும் மூன்று தனி நபர் தேர்வு செய்யப்படுவர்.

நிறுவனத்துக்கு விருதுடன், ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன், இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பரிந்துரைக்கப்படலாம்.

தமிழக அரசு செயலர் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, ஓய்வு பெற்றவர்கள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்கலாம். விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை, www.tnrajbhavan.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை, awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Vignesh

Next Post

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை...! தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று கனமழை...!

Thu Jul 13 , 2023
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரவு முதல் இடி, மின்னலுடன் தொடரும் மழை சென்னையின் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதை, அசோக்நகர், மத்திய கைலாஷ், […]

You May Like