ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் காலமானார்.
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.எஸ். ராவ் என்று அழைக்கப்படும் போப்பனா சத்யநாராயண ராவ், ஹைதராபாத்தில் குளியலறையில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 76 வயதான அவருக்கு ஜான்சி லட்சுமி பாய் என்ற மனைவியும், சுஷ்மா மற்றும் சீமா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
அவரது உடல் விஜயவாடா கொண்டு வரப்பட்டு இன்று தடிகடப்பாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா கல்லூரியின் பிரதான வளாகத்தில் இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. டாக்டர் ராவ், தனது மனைவி ஜான்சி லக்ஷ்மி பாயுடன் சேர்ந்து 1986ல் சிறிய அளவில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, படிப்படியாக தனது கிளைகளை விரிவுபடுத்தினார். இன்று சைதன்யா குழுமம் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளையும் 300 பள்ளிகளையும் கொண்டுள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.