மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகவே குற்றம் சுமத்தப்பட்ட 2️ பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது, நேற்று இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த தாதியா மாவட்ட பாஜகவின் தலைவர் கூட்டு பலாத்கார வழக்கில் காவல்துறையின் கூற்ற பத்திரிகையில் கட்சியின் நிர்வாகியின் மகன் பெயர் இடம் பெற்றால் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
பாலியல் கொடுமையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக காவல்துறை தரப்பின் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கின்ற ஜான்சியில் ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட்ட எல்லோரும் உண்ணாவ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர்கள் என்றும், அத்துடன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தாதியா காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறியிருக்கிறார். குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தன்னையும், தன்னுடைய சகோதரியையும் 4 பேர் கடத்திச் சென்றனர் என்றும், அவர்கள் தங்களை ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். எனவும் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிறுமியும் அவருடைய சகோதரியின் வீடு திரும்பிய பின் அந்த சிறுமியின் சகோதரி தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச்சென்ற குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா தெரிவித்துள்ளார்.