திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் சந்திர பாண்டியன். இவரை மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு விளைவாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.நடு ரோட்டில் அதிமுக கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.