4️ சக்கர வாகனங்களோ அல்லது 2 சக்கர வாகனங்களோ எந்த வாகனமாக இருந்தாலும், தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் போதே தீப்பிடிப்பது வாடிக்கையாகி வருகிறது. அதில் இருந்து பயணிகள் பலர் லாபமாக தப்பித்து விட்டாலும், சிலரால் அதிலிருந்து தப்ப முடியாமல் அந்த வாகனத்தோடு, எரிந்து உயிரிழக்கும் சூழ்நிலையும் தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை- வேலப்பன்சாவடி பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. 2 வாகனங்களும் தீப்பிடித்து எறிய தொடங்கியதன் காரணமாக, பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது கர்நாடக மாநிலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி குளிர்சாதன பேருந்து ஒன்று வேலப்பன்சாவடி சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் மீது மோதியதில் விபத்து உண்டாகி இருக்கிறது.
இந்த பேருந்தில் இருந்த 22 பணிகளும் பின்பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதன் காரணமாக, யாருக்கும், எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் அனைவரும் பத்திரமாக பேருந்தை விட்டு வெளியேறினார்.
பூந்தமல்லி மதுரவாயல் தீயணைப்பு துறையினர் இது குறித்து அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.