பொதுவாக உள்ளூர் விடுமுறை என்பது, பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அல்லது ஏதாவது, முக்கிய விழா போன்றவை நடைபெறும் போது விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். உலகப் பிரசித்தி பெற்ற பணிமயமாதா ஆலயத்தின் திருத்தேர் விழா இன்று நடைபெற இருக்கிறது.
இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொள்வார்கள். ஆகவே இந்த விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பையும், மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியான இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.