சிலிண்டரை எவ்வளவு நாளைக்கு பயன்படுத்த வேண்டும் தெரியுமா?. Expire தேதியை எப்படி கண்டுபிடிப்பது?

cylinder 2025

எல்பிஜி சிலிண்டர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதன் விலை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை புதிய சிலிண்டர் வாங்கும் போதும் அதனை தூக்கி பார்த்து, எடை இருக்கிறதா என்பதை சரி பார்க்கிறோம். ஆனால் யாரும் அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பது இல்லை. பெரிய விபத்துக்களையும், அசம்பாவிதங்களையும் தடுக்க காலாவதி தேதியை தெரிந்து கொள்வது அவசியம். சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


ஒவ்வொரு சிலண்டரிலும் அதன் காலாவதி தேதி எழுதப்பட்டிருக்கும். அவை ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன் மூலம் சிலிண்டரின் காலாவதி தேதியை கண்டுபிடிக்கலாம். சிலிண்டரில் A26, B25, C30, D32 என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். A ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகியவற்றைக் குறிக்கிறது. B ஏப்ரல், மே, ஜூன் ஆகியவற்றைக் குறிக்கிறது. C ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகியவற்றைக் குறிக்கிறது. D அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகியவற்றைக் குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு சிலிண்டரில் A26 என்று குறிப்பிட்டு இருந்தால், அந்த சிலிண்டர் மார்ச் 2026க்குள் காலாவதியாகிவிடும். சிலிண்டரில் D32 என்று குறிப்பிட்டு இருந்தால், அதனை டிசம்பர் 2032 வரை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு சிலிண்டர் காலாவதியாக 15 ஆண்டுகள் ஆகும்.

Readmore: இரவில் லைட் போட்டுத் தூங்கவே கூடாது!. உடலுக்கு மோசமான ஆபத்து!. இருட்டின் அவசியத்தை தெரிஞ்சுக்கோங்க!.

KOKILA

Next Post

இல்லத்தரசிகளுக்கு சூப்பரான டிப்ஸ்..!! அழுக்கு படிந்திருக்கும் உங்கள் மிக்ஸியை ஐந்தே நிமிடத்தில் பளிச்சென மாற்றலாம்..!!

Thu Jun 5 , 2025
இல்லத்தரசிகளே.. உங்கள் வீட்டில் நீண்ட காலமாகவே பயன்படுத்தி வரும் மிக்சி மங்கலாகவும், அழுக்காகவும் இருக்கிறதா..? இனி கவலை வேண்டாம். எத்தனை வருட மிக்சியாக இருந்தாலும், அதை புத்தம் புதுசாக மாற்றலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் : * ஒரு பாத்திரம் * ஒரு கிளாஸ் தண்ணீர் * பழைய நியூஸ் பேப்பர் * பல் துலக்கும் டூத்பேஸ்ட் * சுத்தமான துணி * […]
WhatsApp Image 2025 06 04 at 10.48.26 PM 11zon

You May Like