இல்லத்தரசிகளே.. உங்கள் வீட்டில் நீண்ட காலமாகவே பயன்படுத்தி வரும் மிக்சி மங்கலாகவும், அழுக்காகவும் இருக்கிறதா..? இனி கவலை வேண்டாம். எத்தனை வருட மிக்சியாக இருந்தாலும், அதை புத்தம் புதுசாக மாற்றலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
* ஒரு பாத்திரம்
* ஒரு கிளாஸ் தண்ணீர்
* பழைய நியூஸ் பேப்பர்
* பல் துலக்கும் டூத்பேஸ்ட்
* சுத்தமான துணி
* ஒரு ஃபோர்க் அல்லது சிறிய குச்சி
செய்முறை:
* முதலில், ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பழைய நியூஸ் பேப்பர்களை சிறு துண்டுகளாகக் கிழித்து போட்டுக் கொள்ளவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றவும்.
* அதில், சிறிது டூத்பேஸ்ட்டைச் சேர்த்து, கையால் நன்றாகக் கரைத்து விட வேண்டும்.
* இப்போது, ஊறவைத்த இந்த நியூஸ் பேப்பரைக் கொண்டு மிக்ஸியின் வெளிப்புறப் பகுதிகளை சுத்தம் செய்யவும்.
* மிக்ஸி ஜார் வைக்கும் இடத்தில் நிறைய அழுக்கு இருக்கும். அந்த இடத்தில் ஊறவைத்த பேப்பர் துண்டுகளை வைத்து, ஒரு ஃபோர்க் அல்லது சிறிய குச்சியால் மெதுவாக சுழற்றுங்கள். இப்படி செய்வதால், உள்ளே இருக்கும் அழுக்குகள் அனைத்தும் எளிதாக வெளியே வந்துவிடும்.
* கடைசியாக, ஒரு சுத்தமான துணியால் மிக்ஸியை நன்றாகத் துடைத்து விடுங்கள்.
* இந்த எளிய முறையைப் பயன்படுத்தி உங்கள் மிக்ஸியைப் புதிது போல மாற்றலாம்.