கடலூர் உள்ளிட்ட 9 மாவட்ட மக்களே.. வெளுத்து வாங்கும் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை

rain

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், வரும் 11-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 12-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும, 13, 14-ம் தேதிகளில் கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Vignesh

Next Post

இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி..!! திடீரென அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி..!! என்ன காரணம்..?

Mon Jun 9 , 2025
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வியூகம் வகுப்பது, புதிய நிர்வாகிகள் நியமனம், நீக்கம், நிர்வாகிகளுடன் ஆலோசனை, கூட்டணி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதை இலக்காக வைத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான், தென் மாவட்டங்களை குறிவைத்து […]
Edappadi Palanisamy 2025

You May Like