கவனம்..! இன்று காலை 10.30 மணி முதல்… மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு..!

Job Camp 2025

தூத்துக்குடியில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற இன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது.

இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE, DIPLOMA, I.T.I டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா (Bio Data) மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Job Seekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

Read More: 11 பேர் உயிரிழந்த விவகாரம்: நீதிபதிகள் எழுப்பிய 9 கேள்விகள்.. இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா கர்நாடகா அரசு..?

Vignesh

Next Post

Alert: 14, 15-ம் தேதிகளில் அதி கனமழை எச்சரிக்கை... 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்...!

Fri Jun 13 , 2025
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் […]
rain 1

You May Like