Rain Alert: இன்று கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

rain

கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More: தூள்…! நில பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய போகும் நபர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…! என்ன தெரியுமா..?

Vignesh

Next Post

புனே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி!. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்!.. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு!

Mon Jun 16 , 2025
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்தில் இந்திராயானி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தலேகாவ்ன் அருகே இந்திராயானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் திடீரென இடிந்து விழுந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமான சுற்றுலா பயணிகள் […]
Pune bridge collapse 11zon

You May Like