fbpx

மக்களே…! ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியுமா…? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க…!

தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாகபத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றும் திட்டம் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அநத திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் களைவதற்கான வழிவகைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நடைமுறையை மாற்றி அமைத்து அதை எளிதாக அவர்களுக்கு வழங்க வேண்டிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என சமிபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

60 ரூபாய் செலுத்த வேண்டும்:

இணைய வழி சேவை மூலம் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் நிகழ்நிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுபவை என்பதால் இத் தகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லைபட்டா மாறுதல் மனுக்களை மாநிலத்தில் உள்ள எந்தவொரு பொது சேவை மையத்தின் மூலமும் அளிக்கலாம். அதற்கு கட்டணமாக ரூ.60/- பொதுச் சேவை மையத்தில் பெறப்படுகிறது.இந்த மின்னணு சேவை மூலம், புலப்பட நகல்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பெயர் மாற்றம்

பட்டா, சிட்டாவில் பெயர்களை நீங்கள் மாற்றம் செய்ய முடியும். ஆனால் இதனை நீங்கள் ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. உங்கள் பகுதியில் உள்ள தாலுகா அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பட்டா பரிமாற்ற படிவத்தை வாங்கி, படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் 15 முதல் 30 நாட்களுக்குள் புதிய பட்டாக்கள் வழங்கப்பட்டுவிடும்.

Vignesh

Next Post

கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு அபராத வட்டி விதிக்கக் கூடாது -ரிசர்வ் வங்கி

Sat Aug 19 , 2023
கடன் வாங்குபவர்கள் கடனை கட்ட தவறினாலோ அல்லது இணங்கவில்லை என்றால், பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை விட அதிகமான அபராத வட்டி விகிதங்களை பல வங்கிகள் பயன்படுத்திக்கின்றன. இது தொடர்பாக திருத்தப்பட்ட விதிகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வணிக மற்றும் பிற வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு (ஆர்பிஐ) புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. […]

You May Like