சூப்பர் சான்ஸ்..! ரூ.2,000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

college money 2025

தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது.

இதில் சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகை திங்கள்தோறும் வழங்கப்படும். மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள் அல்லது தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். ஆண் & பெண் இருவருக்கும் தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி உள்ளது.

விடுதியில் உள்ள ஒழிவிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் அல்லது அஞ்சலில் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 27.06.2025 வெள்ளிக்கிழமைக்குள் அளிக்க வேண்டும்.

Read More: வக்ஃப் சட்ட விதிகள் தயாரிப்பு நிறைவு!. 15 முதல் 20 நாட்களில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!. அதிகாரிகள் தகவல்!

Vignesh

Next Post

வரும் 24-ம் தேதி இந்த 6 மாவட்ட ஆசிரியர்களுக்கு மட்டும்...! பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு...!

Fri Jun 20 , 2025
2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]
tn school 2025

You May Like