Rain Alert: தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…!

rain

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மறுபாடு காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, சின்கோனா, வால்பாறை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டம் பொன்னை அணை ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Read more: மழை, வெள்ளம் வந்தாலும் பார்க்க மாட்டோம்; நக்சல்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை!

Vignesh

Next Post

மழை, வெள்ளம் வந்தாலும் பார்க்க மாட்டோம்; நக்சல்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை!

Mon Jun 23 , 2025
மழை, வெள்ளம் வந்தாலும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தொடரும் என்றும் நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புதிய சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) வளாகம் மற்றும் மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மழைக்காலத்தின் ஒவ்வொரு முறையும், […]
amit shah warning 11zon

You May Like