fbpx

தவறான தகவல்களை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும்…! அரசு போட்ட திடீர் உத்தரவு…!

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019- ஐ மீறியது தொடர்பாக, ஐ.க்யூ.ஆர்.ஏ- ஐ.ஏ.எஸ் நிறுவனத்துக்கு எதிரானப் புகாரை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (சி.சி.பி.ஏ) தலைமை ஆணையர் நிதி காரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா தலைமையிலானக் குழு விசாரித்தது.

2015-2017 ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் குறித்து விதிமுறைகளுக்கு மாறாக விளம்பரம் வெளியிட்டு நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டதற்காக அந்த ஆணையம், ஐ.சி.ஆர்.ஏ ஐ.ஏ.எஸ் நிறுவனத்திற்கு எதிராக இந்த உத்தரவைப் பிறப்பித்தது. சி.சி.பி.ஏ தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை முன்வைத்து ஐ.க்யூ.ஆர்.ஏ- ஐ.ஏ.எஸ் நிறுவனம் முக்கியமானத் தகவல்களை வேண்டுமென்றே தவறான தகவல்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், நுகர்வோரை தவறாக வழிநடத்தியது தெரியவந்தது. இதையடுத்து தவறான தகவல்களை நீக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதுடன் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக ரூ. 1,00,000 அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’இனி ரேஷன் கடைகளில் இதை பயன்படுத்தக் கூடாது’..!! அதிகாரிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!

Wed Aug 30 , 2023
பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த விதி அமலுக்கு வந்த பிறகு, ரேஷன் பொருட்களை எடை போடுவதில் ஏற்படும் குளறுபடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த பாயின்ட் ஆப் […]

You May Like