3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் இலவச பயிற்சி…!

Tn Govt 2025

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 10.07.2025 முதல் 12.07.2025 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம் EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டியில் நடைபெற உள்ளது.


பயிற்சி முடிவில், நீங்கள் பின்வரும்வற்றை கற்றுக்கொள்வீர்கள்:

மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தை தெளிவாக புரிந்துகொள்வீர்கள். மோட்டார், பேட்டரி, சார்ஜிங் அமைப்புகள் இயக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சர்வீசிங் முறைகள் மற்றும் அடிப்படை கோளாறுகளை கண்டறியும் திறன், EV டீலர்ஷிப், பழுது சரிசெய்தல் நிலையங்கள் மற்றும் ஃபிராஞ்சைஸி தொழில் மாடல்களை செயல்படுத்தும் பயிற்சி பெறுவீர்கள். மின்சார வாகனத் துறையில் கிடைக்கும் அரசுத் திட்டங்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் குறித்து வழிகாட்டல் பெறுவீர்கள்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள் 9543773337 / 9360221280 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Read more: இன்று தேசிய மருத்துவர் தினம்!. முதலமைச்சராக இருந்தபோதும் மருத்துவர் பணி; Dr. பி.சி. ராயின் மகத்தான சேவை!

Vignesh

Next Post

Alert: 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை...!

Mon Jul 7 , 2025
தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்;;தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை […]
rain 1

You May Like