fbpx

உங்கள் உடலில் உள்ள தொப்பையை குறைக்க வேண்டுமா…..? அப்படியென்றால், இந்த உணவுகள்தான் உங்கள் முதல் ஜாய்ஸாக இருக்க வேண்டும்…!

இன்று பலரும், தங்களுடைய உடல் எடையை குறைப்பதற்கும், தங்களுடைய உடலில் இருக்கும் தொப்பையை குறைப்பதற்கும் வெகுவாக முயற்சித்து வருகிறார்கள். ஆனாலும், அவர்களுடைய முயற்சியில் எந்த விதமான பலனும் கிடைப்பதில்லை. தற்போது, தொப்பையை குறைப்பது எப்படி? என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

மாவுச்சத்து நிறைந்த பொருளான உருளைக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பொரியல், வறுவல் என்று எந்த விதத்திலும், உணவில் இந்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால், அளவுடன் சாப்பிடுவது மிகவும் நன்று.

மேலும், சர்க்கரை, இனிப்பு பானங்கள், சோடா உள்ளிட்டவற்றில் அதிகமான கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இவற்றை அதிகமாக சாப்பிடும்போது ஆரோக்கியத்தில், பிரச்சனைகள் உண்டாகலாம். அதற்கு பதிலாக, பிரஷ் ஜூஸ்களை சாப்பிடுவது நல்லது.

அதேபோல, வெள்ளை ரொட்டி மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உணவாக இருக்கிறது. இதில், மைதா, சர்க்கரை, ஈஸ்ட் போன்றவை சேர்க்கப்படுகின்றன. காலை உணவாக அல்லது ஸ்நாக்காக இதை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, பச்சை பயிறு, திணைகள், கடலைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

பேஸ்ட்ரிகள்,குக்கீகள், கலோரிகள் சேர்க்கப்பட்ட சர்க்கரையால், நிரம்பி இருக்கின்றன. அதாவது, இந்த அதிக கலோரி உணவுகளை சாப்பிட்ட பின்னர், தங்களுக்கு அதிகமாக பசி எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவீர்கள். உடல் எடையை குறைக்க முயற்சி செய்தீர்கள் என்றால், இது போன்ற உணவை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

ஆண்களுக்கு தொப்பை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ஆல்கஹால். கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, ஆல்கஹால் அதிக கலோரிகளை கொடுக்கிறது. ஆகவே தொப்பையை குறைக்க நினைத்தீர்கள் என்றால், நிச்சயமாக ஆல்கஹால் பழக்கத்தை கைவிடுவது மிகவும் நன்று.

Next Post

ரயில் நிலையத்தில் 8 மாத குழந்தைக்கு ஏற்பட்ட பகீர் சம்பவம்….! தாயின் கண் முன்னே நடந்த பயங்கரம்…!

Fri Sep 1 , 2023
உத்திரபிரதேசம் மாநிலத்தில், ரயில் நிலையம் ஒன்றில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 8 மாத பெண் குழந்தையை, அவருடைய தாயின் கையில் இருந்து பறித்து, தரையில் கொடூரமாக அடித்து, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் இருக்கின்ற ஹார்தோய் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், வைஷாலி என்ற பெண், தன்னுடைய 8 மாத கைக்குழந்தையான ப்ரீத்தியுடன், தொடர்வண்டிக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு […]

You May Like