தமிழகத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி நடக்கவிருந்த முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட இருப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்த தேர்வு மூலமாக முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தேர்வு நடைபெறம் என்று குறிப்பிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தமிழ் பாடத்திற்கு 216 பேரும், ஆங்கிலப் பாடத்திற்கு 197 பேரும், கணிதத்திற்கு 232 பேரும், வேதியியலுக்கு 217 பேரும், இயற்பியலுக்கு 233பேரும், தாவரவியலுக்கு 147 பேரும், விலங்கியலுக்கு 131 பேரும், வணிகவியலுக்கு 198 பேரும், பொருளியலுக்கு169 பேரும், வரலாறுக்கு 68 பேரும், புவியியலுக்கு 15 பேரும், அரசியல் அறிவியலுக்கு 14 பேரும், கணினி பயிற்றுனர் நிலை 1க்கு 57 பேரும், உடற்கல்வி இயக்குனர் நிலை 1க்கு 102 பேர் என மொத்தம் 1996 ஆசிரியர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கு ஆகஸ்டு 12-ந்தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பனிக்கலாம் எனவும், மேலும் விண்ணப்பங்களில் உள்ள குறைகளை தீர்க்க ஆகஸ்டு 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு (Group II மற்றும் II-A) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஆசிரியர் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 02/2025) (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 10.07.2025 அன்று வெளியிடப்பட்டு, இப்பணியிடங்களுக்கான தேர்வு நாள் 28.09.2025 என அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், அதே நாளில் (28.09.2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் Combined Civil Services Examination – II (Group II and II-A Services) தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், மேற்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More: உங்கள் மகளின் பெயரில் ரூ.24,000 டெபாசிட் செய்தால்.. ரூ.11 லட்சம் கிடைக்கும்.. விவரம் இதோ..