15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…!

rain

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

மேலும், 15 முதல் 17-ம் தேதி வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more: அதிர்ச்சி…! திருப்புவனம் அஜித் போல் மற்றொரு சம்பவம்…! அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்…!

Vignesh

Next Post

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கோயில்.. 1000 பேர் முயன்றும் இடிக்க முடியவில்லை..! இன்று வரை விலகாத மர்மம்!

Sat Jul 12 , 2025
இந்தியா கோயில்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது. நம் தெருவிலும் கோயில்களை பார்க்க முடியும்.. இந்திய கலாச்சாரத்தின் பெருமையின் அடையாளமாக கோயில்கள் இருக்கின்றன.. நாட்டில் உள்ள சில பிரபலமான கோயில்களை அவ்வப்போது இடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், இன்றும் அந்தக் கோயில்கள் அதே பிரம்மாண்டத்துடன் கம்பீரமாக நிற்கின்றன.. அப்படி ஒரு தனித்துவமான கோயிலை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். மகாராஷ்டிராவில் பல வரலாற்று மற்றும் பிரமாண்டமான கோயில்கள் உள்ளன. இந்த […]
FotoJet 29 3

You May Like