தமிழகத்தில் 18-ம் தேதி வரை மழை…! குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 16, 17, 18-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் 15 முதல் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 81 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னை சென்ட்ரலில் 7 செ.மீ., சென்னை கொரட்டூர், விம்கோ நகர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் 6 செ.மீ., சென்னை சோழிங்கநல்லூர், ஐஸ் ஹவுஸ், கோவை மாவட்டம் சோலையாறு, அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை, திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், சிவகங்கை, செங்கல்பட்டு மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Read More: இன்று உலக மக்கள் தொகை தினம்!. 2030க்குள் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்!. இந்த மாநிலம்தான் முதலிடம்!.

Vignesh

Next Post

சோகம்...! பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடல்நல குறைவால் காலமானார்...!

Sun Jul 13 , 2025
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர், 2023-ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்தினார். கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் […]
srinivasan 2025

You May Like