நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை முதலில் சரிபார்க்க வேண்டும். தமிழகத்தில் வீட்டுக் கடன் பெற விரும்புவோருக்கு புதிய விதிமுறைகளை வங்கிகள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சிறு நிதி வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க கூடுதல் ஆவணங்களையும், சில சரிபார்ப்பு முறைகளையும் தற்போது கட்டாயமாக்கியுள்ளன.
வீட்டுக் கடன் பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பாஸ்போர்ட். வாக்காளர் அடையாள அட்டை, மின்சார கட்டண ரசீது அல்லது ஆதார் அட்டை. கடைசி 3 முதல் 6 மாதங்களுக்கான சம்பள விவரம். சொந்த தொழில் செய்தால் கடைசி 2 ஆண்டு வருமான வரி கணக்கு மற்றும் 6 மாத வங்கி அறிக்கை. சொத்து உரிமை ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்டிட அனுமதி. மாத சம்பளம் பெறுவார் பணி அனுபவ சான்று. சொந்த தொழில் செய்பவர்கள் 3 வருட வணிக வரலாறு வேண்டும். இந்த ஆவணங்கள் இருந்தால் வீட்டுக்கடன் விண்ணப்பத்தை விரைவாக பரிசீலிக்க முடியும் என்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
750 மற்றும் அதற்கு மேல் CIBIL ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டி விகிதங்களில் கடன் பெற உதவும். விண்ணப்பதாரர்களுக்கு நிலையான வருமான ஆதாரம் இருக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியின் படி, மாத வருமானத்தில் 50 சதவீதம் வரை EMI ஆக செலுத்த முடியும் என்பதை விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு மானியமும் வழங்கப்படும்.
வீட்டுக் கடன் பெற விரும்புவோர், தங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்ல விதத்தில் பராமரிக்க வேண்டும். மேலும், தகுதியான பயனாளிகள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.9 லட்சம் வரை வட்டி தள்ளுபடி பெறலாம். சென்னையில் வசிக்கும் மக்கள் வீட்டுக்கடனை குறைந்தபட்சம் 8% வட்டி விகிதத்தில் பெற முடியும்.