அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், அவர் பணத்தை திருப்பித் தருவதாக உறுதி அளித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வழக்கை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது.
ஒய். பாலாஜி என்பவர் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவது ஒப்பந்ததாரரை திருப்திப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட செயல்திறனுக்கான வழக்குகள் போன்ற அதிகாரபூா்வ பதவியை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் ஊழல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வது தொடா்பான வழக்குகளை நீதிமன்றம் கையாள முடியாது என்றும் கூறி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை அப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
உச்சநீதிமன்றத்தின் 2022-இல் தீா்ப்பில் கூறப்பட்ட கருத்துகளை நீக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் விசாரணை நீதிமன்றத்தை பாதிக்கக்கூடும் என்றும், நியாயமான விசாரணைக்கான தனது உரிமையை பாதிக்கக்கூடும் என்றும் பாலாஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரினார்.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், “நிவாரணம் கேட்டு வந்தது உங்கள் தரப்பே. உங்கள் வழக்கை இரவு முழுவதும் ஆய்வு செய்து வந்திருக்கிறோம். இப்போது வழக்கை சாதாரணமாக ஒத்திவைக்க வேண்டும் என கேட்பது எந்த விதமான நடைமுறை?”
எனக் கடுமையாக கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Read more: உஷார்!. தினமும் டை அணிகிறீர்களா?. மூளைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்!.