தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு, ஏற்கனவே விடுபட்ட பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இம்முறை கட்டாயம் ரூ.1000 கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இருப்பின் உடனடியாக உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சர் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முகாம்கள் மூலமாக 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு கட்டங்களாக பத்தாயிரம் முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் கடலூர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “விடுபட்ட தகுதிவாய்ந்த மகளிருக்கு இந்த முறை கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். மேலும் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய பயனர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:
விண்ணப்பம் வழங்கப்படும் போதே விண்ணப்பத்துடன் விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் இடம், நாள், நேரம் ஆகியவை அடங்கிய டோக்கனும் இணைத்து வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.சம்பந்தப்பட்ட பயனாளிகள் மட்டுமே விண்ணப்பங்களை விண்ணப்பப்பதிவு முகாம்களுக்கு கொண்டு வரவேண்டும். விண்ணப்ப முகாம்களுக்கு செல்லும்போது பெண் உறுப்பினரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிகணக்கு புத்தகம், மின்சார வாரியகட்டண ரசீது ஆகியவற்றின் அசல்களை எடுத்துச் செல்ல வேண்டும்