ஊழல் வழக்கில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை 2021 இல் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 50 (1) (2) இன் கீழ் கைது வாரண்ட் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து ஆதாரங்களும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார், மேலும் அவரது பாதுகாப்பு அவருடன் செல்ல அனுமதிக்கப்படும் போது அவரது வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்.
வெள்ளிக்கிழமை, ஆந்திரப் பிரதேச சமூக நலத்துறை அமைச்சர் மெருகா நாகார்ஜுனா, அரசு பணத்தைக் கொள்ளையடித்ததற்காக சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.