குட் நியூஸ்..! பொது வருங்கால வைப்பு நிதி.. வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை…!

Tn Govt 2025

பொது வருங்கால வைப்பு நிதி – 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சிறு சேமிப்பு மற்றும் வரி சேமிப்புத் திட்டமாகும். இது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தைப் பெற உதவுகிறது. PPF கணக்கைத் திறப்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் வருங்காலத்திற்கான சேமிப்பைத் தொடங்கலாம் மற்றும் வரிச் சலுகைகளையும் பெறலாம். PPF கணக்கின் மூலம் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை பெறலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி – 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது. அதன் படி 01.01.2025 முதல் 31.03.2025 மற்றும் 01.04.2025 முதல் 30.06.2025 வரை 7.1 சதவீதமாக வழங்கப்படும்.

2025-2026-ஆம் நிதியாண்டு முதல் 01.07.2025 30.09.2025 வரையிலான காலத்திற்கு பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அதனைப்போன்ற பிற வைப்பு நிதிகளில் சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு 7.1% (ஏழு புள்ளி ஒரு சதவீதம்) வட்டி கணக்கிடப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கான வட்டி விகிதம் 01.07.2025 30.09.2025 வரையிலான காலத்திற்கு 7.1% (ஏழு புள்ளி ஒரு சதவீதம்) வட்டி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.

தாமதமாக வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதித் தொகை மூன்று மாதங்களுக்கு மேலாக பட்டுவாடா செய்யப்படாமல் இருக்கும் எனில், அதற்கான வட்டி விகிதம், அதே விகிதத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

இந்த நாட்டில் ஜீன்ஸ் அணிந்தால் ஜெயிலுக்கு தான் போகணும்.. இங்கு ஃபேஷன் என்பதே பெரும் குற்றம்.. ஏன்?

Sun Jul 20 , 2025
என்ன உடை அணிய வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் இந்த நாட்டில் ஜீன்ஸ் அணிந்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. ஜீன்ஸ் அணிந்தால் அதற்கு தண்டனையாக மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.. அல்லது சிறைத்தண்டனை கூட கிடைக்கும்.. வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான […]
AA1It9CI

You May Like