சென்னையில் சொந்தமாக வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் சொந்தமாக வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் 29.07.2025 முதல் 31.07.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நிறுவனம் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் கற்றுக்கொள்ளப்போவது: “வலையொளி” (யூடியூப்) சேனல் உருவாக்கம், வீடியோ மற்றும் ஸ்லைட்ஷோ தயாரிப்பு, சமூக ஊடகங்களை இணைக்கும் நுட்பங்கள், வாடிக்கையாளர் வலையமைப்பை விரிவுபடுத்தும் முறைகள், பயனுள்ள ஆன்லைன் சந்தைப்படுத்தல், ஊக்குவிப்பு, டொமைன் பெயர் பதிவு மற்றும் ஹோஸ்டிங், இணையதள வடிவமைப்பு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் இவற்றுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10 பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/வகுப்பு தேர்ச்சிப் திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் தங்குமிட வசதியும் நிறுவனம் வழங்குகிறது. தங்கும் வசதி விரும்புவோர், முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்காக, www.editn.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 9543773337 / 93602 21280 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.
Read more: குட் நியூஸ்..! பொது வருங்கால வைப்பு நிதி.. வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை…!