மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 635 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் முதற்கட்டமாக இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாகவும், இது மரகேஷிலிருந்து (Marrakech) தென்மேற்கே திசையில் 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பின்னர், மீண்டும் இன்று அதிகாலை 3.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 7 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தற்போது வரை 635 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 350 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 150-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.