ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் விளம்பரதாரர் இயக்குநர் அனில் டி. அம்பானி ஆகியோர் ‘மோசடி’ நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அறிவித்துள்ளது. இந்த தகவலை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
ஜூன் 13, 2025 அன்று RBI-யின் மோசடி மற்றும் வகைப்பாடு விதிமுறைகளின்படி அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மோசடி நிறுவனம் என அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். தொடர்ந்து, ஜூன் 24 அன்று இந்த தகவல் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், சிபிஐயிடம் புகார் அளிக்கும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ.2,227.64 கோடி மதிப்புள்ள நிதி கடன் மற்றும் ரூ.786.52 கோடி மதிப்புள்ள வங்கி உத்தரவாதம் தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாகத் தடுமாறிய நிலையில், இது திவால்நிலைச் சட்டத்தின் கீழ் NCLT-க்கு முன் விசாரணையில் உள்ளது. அனில் அம்பானிக்கும் தனிநபர் திவால்நிலை வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.
முந்தைய நாட்களில் வகைப்படுத்தப்பட்ட மோசடி புகாரை உயர் நீதிமன்ற உத்தரவால் திரும்பப் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செப்டம்பர் 2, 2023 அன்று புதிய வகைப்படுத்தல் செய்யப்பட்டு, ஜூலை 15, 2024 இல் RBI விதிமுறைகளுக்கு ஏற்ப மீண்டும் ‘மோசடி’ என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி தரப்பில் தற்போது வரையில் பதிலளிக்கப்படவில்லை.
இவ்வாறு கடன் மோசடி என வகைப்படுத்தப்பட்ட கணக்குதாரா்கள், மோசடி செய்யப்பட்ட தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்திய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்கப்படுகிறாா்கள். இந்தத் தடைக்குப் பிறகு இவா்களுக்கு கடன் வழங்குவது குறித்து அந்தந்த வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவா்களின் கடன் கணக்குகளுக்கு மறுசீரைமைப்பு, கூடுதல் கடன் போன்ற எந்த வசதிகளும் அனுமதிக்கப்படாது.
Read more: மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கு மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு