டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது […]

வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கலாமா? என்ற கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், விசாரணை அதிகாரியாக திருச்சியை சேர்ந்த டிஎஸ்பி பால்பாண்டி இருந்தார். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இதுவரை […]

81 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்திருக்கும் சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் இந்தியர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு குறித்த தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த புலனாய்வுத் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர். […]

2ஜி வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு ஏற்பட்டதால், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு […]

தர்மபுரி அருகே வச்சாத்தி என்ற மலைக்கிராமத்தில் 18 பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்க உள்ளது. ஆனால், இந்த நீதிமன்ற தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிம்மதியை வழங்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கடந்த 1992 ஆம் வருடம் வருவாய் துறை வனத்துறை […]

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது வேதனையை தெரிவித்ததோடு மத்திய-மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டது. நேற்று முன்தினம், சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். […]

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 288-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் 10 பேர் கொண்ட […]

மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் […]

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று மதியம் 12 மணிக்கு புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளார். மேலும், ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் […]

மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் […]