மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகள் உள்ளிட்ட முக்கிய அரசு விவகாரங்கள் குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.
தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.. அப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. அடுத்த 3 நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. இதனால் அவர் 2-வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை மருத்துவப் பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டார். இதன்பின் பரிசோதனை எடுக்கப்பட்ட பின், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினை சந்திக்க அவரின் சகோதரர் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தார்.
இந்நிலையில் மருத்துவமனை இருந்தபடியே அரசு பணிகளை தொடர்கிறேன் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை. தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
Read more: தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும்..? EPS அழைப்பை நிராகரித்த சீமான், விஜய்..!!