மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் சதாராவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயது இளைஞர் ஆர்யன் வாக்மலே என்பவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். சிறிது காலமாக, இந்த இளைஞர் சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமி காதலை நிராகரித்ததால், பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.
அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் பலரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் சாதுர்யமாக செயல்பட்டு, 2 காவலர்கள் உதவியுடன் அந்த இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டனர். பின்னர், அந்த இளைஞரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். உள்ளூர்வாசிகளின் சமயோஜித நடவடிக்கையால் சிறுமி அசம்பாவிதத்தில் இருந்து தப்பினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் அந்த சிறுமிக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஷாஹுபுரி காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை பிடித்துச் சென்றனர். பிடிபட்ட இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட பல்று பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
Readmore: Weak Password-ஆல் வீழ்ந்த 158 ஆண்டுகள் பழமையான நிறுவனம்.. 700 பேருக்கு வேலை இல்லை..