பொதுவாக தமிழகத்தின் பிரபலமான உணவாக இட்லி மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் பாரம்பரிய உணவு என்ற பட்டியலிலும் இது மிக விரைவில் இடம் பிடிப்பதும் சாத்தியமாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை என்று அனைத்து தரப்பினரும் இந்த இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்த இட்லி பிரியர்கள் இதை சாப்பிடாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு கூட சென்று விடுவார்கள். அதிலும், பொசப்பொசப்பான இட்லிக்கு ஏற்றவாறு, சுவையான சாம்பார், சட்னி ஆகியவற்றை தயார் செய்து, அதில் தொட்டு இட்லியை சாப்பிடும் போது அந்த சுவை ஒட்டுமொத்த உலகையும் மறக்க வைக்கும் அளவிற்கு இட்லி பிரியர்களைக் கொண்டு சென்று விடும்.
அதேசமயம், இந்த இட்லியில் கலோரிகள் அதிகமாக இருப்பதாலும், மாவுச்சத்து அதிகமாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள் இந்த இட்லியை அதிகமாக சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. இன்றளவும் சர்க்கரை நோயாளிகள் சாதம் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினால், அவர்களுடைய தேர்வு சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை நிறைந்த பொருளாக தான் இருக்கும். தவிர இட்லியை ஒருபோதும் அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
ஆனாலும் ரவா இட்லி, ராகி இட்லி போன்ற பலவிதமான இட்லிகளை இந்த நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், எந்த விதமான பிரச்சனையும் அவர்களுக்கு ஏற்படாது.
அதே சமயம், இந்த இட்லிக்கு, தேங்காய் சட்னியை விட, தக்காளி சட்னி, சாம்பார், புதினா சட்னி போன்றவை மிக சிறந்த சுவையை வழங்கும்.