இந்திய உளவுத்துறையில் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,42,400 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

job

இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE – II/EXECUTIVE) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3717 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் கட்டாயம். அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஆகஸ்ட் 10, 2025 நிலவரப்படிகுறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 1 மணி நேரம் ஆகும். இரண்டாம் பகுதி கட்டுரை வரைதல். இது 50 மதிப்பெண்களுக்கு 1 நேர கால அளவில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு ஜூலை 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 19ஆம் தேதி முதல் www.mha.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஆகும்.

Read more: 9 மணி நேரம் நிர்வாணம்.. பாத்ரூம் கூட போக விடல..!! டிஜிட்டல் அரெஸ்ட்டால் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த சோகம்

English Summary

Indian Intelligence Agency Job Opportunity.. Monthly Salary Rs.1,42,400.. Apply Now..!

Next Post

11 பேர் பலி.. பலர் காயம்.. தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்..

Thu Jul 24 , 2025
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இன்று இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 11 தாய்லாந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். இதனால் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. கம்போடியா தாய்லாந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை ஏவிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாய்லாந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.. தாய்லாந்தில் […]
soldiers from thailand and cambodia exchange fire at border 243243243 16x9 0 1

You May Like