fbpx

மின் கட்டணம் செலுத்திட்டீங்களா..? இனி நீங்களே ரசீதை ஈசியா டவுன்லோடு பண்ணலாம்..!! புதிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல், மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விவரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள். சில நாட்களில், மின் கட்டண விவரம் நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படுகிறது. ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விவரம் தெரிவிக்க, புது “மொபைல் செயலி” அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் அறிவிப்பு வரும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படி அடுத்தடுத்த வசதிகளை மின்வாரியம் செய்து வரும் நிலையில், மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மின் கட்டண வசூல் மையம், அரசு, இ – சேவை மையம், அஞ்சல் நிலையங்களில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நீங்கள் கட்டணம் செலுத்தியதுமே, அதற்கான ரசீது வழங்கப்பட்டுவிடும்.

மின் வாரிய இணையதளம், செல்போன் ஆப், “பாரத் பில் பே” மூலம் டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். முந்தைய மின் கட்டண ரசீதுகளை பெற விரும்புவோர், அதை வெப்சைட்டில் டவுன்லோடும் செய்து கொள்ளும் வசதியை, மின்வாரியம் செயல்படுத்தியுள்ளது. அதன்படி, மின் வாரியத்தின், “எக்ஸ்'” என்ற வெப்சைட் வாயிலாக, tnebnet.org/ என்ற இணையதள பக்கத்திற்கு நேரடியாக சென்று, மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு, ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நிலவின் மேற்பரப்பில் நிலநடுக்கம்..!! வீரர்கள் இதை விட்டுச்சென்றது தான் காரணம்..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Fri Sep 15 , 2023
சமீபத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் பல்வேறு ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியது. இவை இரண்டும் தற்போது ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றுள்ளன. இவை செயல்பாட்டில் இருந்த போது நிலவில் நிலநடுக்கம் ஒன்றையும் பதிவு செய்திருந்தது. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் “இயற்கையான சம்பவம்” ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த இரண்டு […]

You May Like