தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் தகவலின்படி, அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி, மக்தலில் உள்ள அரசு விடுதியில் தங்கி வந்தவர். நாய் கடித்ததால் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், ஜூலை 25 மதியம் தாயார் வேலைக்குச் சென்றபோது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் ஓடி வந்து, இரத்தப்போக்குடன் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் அந்த தகவலை சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். சிறுமி முதலில் உள்ளூர் RMP மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததால் மரிக்கல் அரசு மருத்துவமனை மற்றும் அதன் பின்னர் மகபூப்நகர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் தந்தை மீது வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட தந்தை தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்ட்கொண்டு வருகின்றனர். பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ரஷ்யா நிலநடுக்கம் எதிரொலி.. சுனாமி ஆபத்தில் உள்ள நாடுகள், தீவுகள்.. முழு லிஸ்ட் இதோ..