உஷார்…! 7 மாவட்டத்தில் கனமழை.. 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று…! கடலுக்கு யாரும் போகாதீங்க…!

rain 1

தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தில் நாளை டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 4-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், 6-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்றுமுதல் உலகநாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பு!. உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்!. இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்?

Fri Aug 1 , 2025
இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. 2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் […]
trump 90days tax 11zon

You May Like