தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நாங்கள் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பிரேமலதா அறிவித்தார். இந்த சூழலில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பொருளாளர் எல்.சுதீஷ் ஆகியோர் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் உடனான பிரேமலதாவின் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஏதேனும் இந்த சந்திப்பில் நடந்திருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே சமயம் 2026 தேர்தலில் மதிமுகவின் இடத்தில் தேமுதிகவை கொண்டு வர திமுக புது வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. தேமுதிக கூட்டணி முடிவு குறித்து வாய்த்திறக்காமல் இருக்கும் அதே வேளையில் சமீபகாலமாக திமுகவை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டார். அதே சமயம் மதிமுக திமுக இடையிலான உறவில் சிக்கல் இருந்து வருகிறது. துரை வைகோ பாஜக உடன் மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதே இதற்கு காரனம் என சொல்லப்படுகிறது.
Read more: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…! ஏக்கருக்கு ரூ.7,450 மானியம்… மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!