“வயிறு வலிக்குது அம்மா.. என்னை கொன்னுடுவாங்க..” தாய்க்கு கர்ப்பிணி பெண் அனுப்பிய கடைசி மெசெஜ்..!!

kerala sucide 1

இந்தியாவில் பெண்களைத் துன்புறுத்தும் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் வெள்ளங்குளாரியல் வசித்து வரக்கூடிய நௌபல் என்பவருடைய மனைவி பசீலா. 23 வயதாகும் பசீலா கர்ப்பமாக உள்ளார். திருமணம் ஆனது முதல் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தியதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பசீலா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் தன்னுடைய தாயுக்கும், சகோதரிக்கும் WhatsApp மூலம் அனுப்பிய வாய்ஸ் மெசெஜ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், “கணவர் வயிற்றில் அடித்தார். என்னால் வலி தாங்க முடியவில்லை.. தினமும் இதே சித்திரவதைதான்.. இன்று அடித்து என் கையை உடைத்து விட்டார்” எனக் கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும், “என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்” என தன் உயிருக்கு நேரும் அச்சத்தைப் பகிர்ந்துள்ளார்.

மாமியாரும் தொடர்ந்து துன்புறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில் திருச்சூர் போலீசார் நௌபல் மற்றும் அவரது தாயை கைது செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக IPC பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் வரதட்சணை கொடுமையே அவரது தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்ததுள்ளது. வரதட்சணை கேட்டு ஃபசீலாவின் கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். உச்சக்கட்டத்தில் கொடுமை தாள முடியாமல் கர்ப்பிணிப் பெண்ணான ஃபசீல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

Read more: பல ஆயிரம் கோடி மோசடி.. ED சம்மன்.. ஏற்கனவே திவாலில் இருக்கும் அனில் அம்பானிக்கு புதிய சிக்கல்..

English Summary

I’m dying or they’ll kill me: Pregnant Kerala woman’s text to mother before suicide

Next Post

பெட்ரூமில் உள்ள இந்த 3 பொருட்கள் சத்தமே இல்லாமல் நோயை உண்டாக்குகின்றன! எச்சரிக்கும் மருத்துவர்..

Fri Aug 1 , 2025
There are some toxins in your bedroom that can cause illness without making a sound.
152310741

You May Like