தமிமுன் அன்சாரிக்கு எதிர்ப்பு…! சாலையில் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு…!

ansari 2025

கன்னியாகுமரியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரிக்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இஸ்லாமிய அமைப்பான குமரி டிரஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களை அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே சில நாட்களாக வாக்குவாதங்கள் நடைப்பெற்று வந்துள்ளது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று குளச்சல் பெரிய பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடையே குமரி டிரஸ்ட் அமைப்பு சார்பாக நிகழ்ச்சிக்கு வர கோரி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறி இரு தரப்பை சேர்ந்தவர்களும் மாறி, மாறி தங்களுக்குள் சாலையில் வைத்து கடுமையாக தாக்கி கொண்டார்கள். இதில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி பைரோஸ் ராஜா என்பவர் படுகாயம் அடைந்தார்.

Vignesh

Next Post

தூள்..! அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... ரூ.1,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவிப்பு...!

Sat Aug 2 , 2025
அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சகண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் ; உயர் கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, […]
tn govt 2025 3

You May Like