fbpx

குட் நியூஸ்..! படிவம் 10 B & 10 BB சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30-ம் தேதி வரை நீட்டிப்பு…!

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 10 பி / 10 பிபி மற்றும் படிவம் ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-23 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை படிவம் 10 பி / படிவம் 10 பிபியில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30.09.2023 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இப்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (சிபிடிடி) 31.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கையை ஐடிஆர்-7 படிவத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.10.2023-ல் இருந்து 30.11.2023 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. 225/177/2023/ITA-II-ல் 16/2023-ஆம் எண் கொண்ட சிபிடிடி சுற்றறிக்கை இன்று (18.09.2023) வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

Vignesh

Next Post

இ-சேவை மையத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண்..!! கணவன் வெறிச்செயல்..!! நடந்தது என்ன..?

Tue Sep 19 , 2023
கேரள மாநிலம் கொல்லம் அருகே பாரிப்பள்ளி நாவாயிக்குளம் பகுதியில் வசித்து வருபவர் ரஹீம் (50). இவருடைய மனைவி நாதிரா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாதிரா பாரிப்பள்ளியில் உள்ள ஒரு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே நாதிராவின் நடத்தையில் ரஹீமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நாதிரா வழக்கம் போல் இ-சேவை மையத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். […]

You May Like