பொதுத்தேர்வு எழுதிய 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்…!

Anbil Mahesh School Mask 2025

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

இதற்கான சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வெளியே வராதீங்க...! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று 9 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை...!

Wed Aug 6 , 2025
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய […]
rain 1

You May Like