நாகலாந்து கவர்னர் இல. கணேசன் (80) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், அவரது உடல்நிலை தொடர்பாக 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த இல. கணேசன்? நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார் இல.கணேசன். முன்னதாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றினார். பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
Read more: சோகம்.. திமுக மூத்த தலைவர் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்..!!