அதிமுக முன்னாள் அமைச்சர் KC வீரமணியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என ஒவ்வொரு ஊருக்கும் சென்று பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்து இருக்கிறார்.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த தேமுதிக, இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை தெளிவுபடுத்திய பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவர் மாதம் நடைபெறும் கடலூர் மாநாட்டில் அறிவிப்பதாக கூறினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை எனப் பிரேமலதா வெளிப்படையாக கூறிய நிலையில், அதிமுக தரப்பினரின் சந்திப்புகளை தவிர்த்து வந்திருந்தார். இந்த நிலையில் திருப்பத்தூரில் நடைபெற்ற ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்துக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் KC வீரமணியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். KC வீரமணியுடன் நடந்த இந்த திடீர் சந்திப்பு, அதிமுக-தேமுதிக உறவில் புதிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது.
Read more: Breaking : 11-ம் பொதுத்தேர்வு ரத்து.. 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. மாநில கல்விக் கொள்கை..