இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) “பி.எம்.ஆர்.டி.எஸ் மற்றும் சி.எம்.ஆர்.டி.எஸ் உரிம விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுஆய்வு செய்வது” குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆலோசனை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 26.09.2023 என்றும், மாற்றுக் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 10.10.2023 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற தொழிற் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை முறையே 24.10.2023 மற்றும் 07.11.2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட்டிப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.
கருத்துகள் / மாற்றுக் கருத்துகள் டிராய் ஆலோசகர் (நெட்வொர்க்குகள், ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்கள்) திரு அகிலேஷ் குமார் திரிவேதிக்கு advmn@trai.gov.in மின்னணு வடிவத்தில் அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் / தகவலுக்கு, ஆலோசகர் அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-23210481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.