Tn Govt: புனித பயனம் சென்று திரும்பியவர்களுக்கு ரூ.5000 மானியம்… நேரடியாக வங்கி கணக்கில் வரவு…!

tn Govt subcidy 2025

தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் சென்று திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சேரந்த 150 பௌத்தநபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் சென்று திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmz.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன், ஆணையர் சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Vignesh

Next Post

'மரணம் உங்கள் பெருவிரலில் தொடங்குகிறது' சமூக ஊடக கூற்றின் உண்மை என்ன..? மருத்துவர்கள் விளக்கம்..

Fri Aug 15 , 2025
Social media claims ‘death begins in your big toe’; we ask experts what that means
big toe numbness

You May Like