சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு மக்களுக்கு தீபாவளிக்கான மிகப்பெரிய பரிசை அறிவித்தார். ஜிஎஸ்டி வரி குறைப்பதற்கான சீர்திருத்த திட்டம் தீபாவளிக்குள் அமலுக்கு வரும் எனவும், அதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு நிதி நன்மை கிடைக்கும் வகையில் திட்டம் அமைக்கப்பட உள்ளது. “இந்த சீர்திருத்தம் தீபாவளி பரிசாக மக்களுக்கு கிடைக்கும்” என பிரதமர் கூறினார். மேலும், லட்சாதிபதி பெண்களின் எண்ணிக்கை தற்போது உள்ள 2 கோடியிலிருந்து 3 கோடியாக அதிகரிக்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் பெண்களின் பொருளாதார தன்னிறைவை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் எனவும் கூறினார்.
பிரதான் மந்திரி அபங்கா பாரத் ரோஸ்கர் யோஜனா என்ற புதிய திட்டம் இன்று (ஆகஸ்ட் 15) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதல்முறையாக வேலைப்பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும்.
மேலும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். வேலைவாய்ப்பில் பங்கேற்பை அதிகரிப்பதும், இளைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.
Read more: நகை வாங்க சரியான நேரம்.. தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்துள்ளது?