தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு…! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு

Tn Govt 2025

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


தற்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 377 காலிப்பணியிடங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 49 காலிப்பணியிடங்களுக்குமான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 18.08.2025 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொள்ளவும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌

Vignesh

Next Post

தேங்காய் முதல் நெய் வரை!. இவற்றையெல்லாம் ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது!. இந்த விதி உங்களுக்குத் தெரியுமா?.

Sat Aug 16 , 2025
இந்தியா ஒரு பெரிய நாடு, இங்கு ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்ல ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும், இது ஒவ்வொரு நாளும் சுமார் 13,000 ரயில்களை இயக்குகிறது. ரயில் பயணம் வசதியானது மற்றும் பாதுகாப்பானது மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கு மலிவு விலையிலும் உள்ளது. ஆனால் ஒரு […]
train

You May Like