சூப்பர்…! கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் மத்திய அரசு திட்டம்…!

pregnancy 2025

உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது.


இத்திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/- தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டத்தின் கீழ் மகப்பேறு நன்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீதமுள்ள ரொக்க ஊக்கத்தொகையைப் பெறுகிறார், இதனால் சராசரியாக, ஒரு பெண் ரூ.6,000 பெறுகிறார்.

இத்திட்டம் தாய்மார்களுக்கு பாதுகாப்பான பிரசவத்திற்கும், முதல் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கும் உதவுகிறது. இதற்கான இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 2023-24 நிதியாண்டின் போது, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 53,76,728 ஆக இருந்தது ஏன் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஆவணி மாதத்தில் திருமணம், புதிய தொழில் தொடங்கலாமா..? சிறப்புகள் என்ன..? முக்கிய விரதங்கள் எப்போது..?

Sun Aug 17 , 2025
அம்மன் வழிபாட்டிற்கே உரிய மாதமான ஆடி மாதம் முடிந்துவிட்டது. முழுமுதற் கடவுளாகிய விநாயகரையும், காக்கும் கடவுளான திருமாலையும், உலகிற்கே தந்தையாக விளங்கும் சிவனையும், வழிபடுவதற்கான ஆவணி மாதம் இன்று தொடங்கியுள்ளது. ஆவணி மாதம் தான் விநாயகரும், கிருஷ்ணரும் அவதரித்த மாதம் ஆகும். சூரியன் சிம்ம ராசியில் நிலைபெற்று வலிமை பெறும் இந்த காலக்கட்டத்தில், தொடங்கப்படும் எந்த காரியமும் சிறப்பாக முடியும் என்ற நம்பிக்கை. இதுவே, ஆவணிக்கு “சிங்க மாதம்” என்ற […]
Avani 2025

You May Like